CHICAGO
NEW YORK
LONDON
INDIA
HONGKONG
TOKYO
SYDNEY
Business
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

விழாக்களும் - விருதுகள்

யாழ். இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!

26 January, 2016,Tuesday

யாழ். இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 12.11.2015 அன்று கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் Dr.பொன்னுத்துரை குபேரன் அவர்களும் அவரது பாரியார் திருமதி ஜமுனாதேவி குபேரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வினை தொடர்ந்து ஆசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் சபாலிங்கம் அரங்கில் தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினரும் ,அவரது பாரியாரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள். இதன் பின் விருந்தினர்கள் பான்ட் வாத்தியத்தோடு குமாரசுவாமி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

மேடை நிகழ்வின் முதல் நிகழ்வாக தேவாரம் இடம்பெற்றது. பின் அதிபர் அவர்கள் 2014 ஆம் ஆண்டுக்குரிய அதிபர் அறிக்கையை வாசித்தார். பின் அடுத்த நிகழ்வாக பிரதம விருந்தினருடைய உரை நடைபெற்றது.அதனை தொடர்ந்து ஆங்கிலப் பேச்சும், தமிழ் பேச்சும் மாணவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

இப் பரிசளிப்பு நிகழ்வில் தரம் 6 தொடக்கம் தரம் 12 வரையிலான மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டுக்களின் திறமையின் அடிப்படையில் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில் வகுப்புத் தேர்ச்சி ,2014ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் என்ற ரீதியில் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் சர்வதேச, தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும், விளையாட்டு வீரர்களுக்கு வர்ண விருதுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு பாடசாலை ஆசிரியர்கள் ,அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்ககள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

விமர்சனம்

முன்னைய செய்திகள்

சிறந்த வெளிநாட்டு படமாக போலந்தின் இடா தேர்வு செய்யப்பட்டது!

>Jan-26-2016 மேலும்...

லாஸ்ஏஞ்சல்சில் நடந்த 86 வது ஆஸ்கார் விழாவில்!

>Jan-26-2016 மேலும்...

இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – சிட்னி பெருமையுடன் வழங்கும் கீதவாணி விருதுகள் 2014!

>Jan-26-2016 மேலும்...

விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்!

>Jan-26-2016 மேலும்...
 
மரணஅறிவித்தல்
நினைவஞ்சலி
விளம்பரங்கள்
அதிசயங்கள்
வினா விடை பரிசு
BBN TAMIL FM மரணஅறிவித்தல்
வாசகர்கள்
நாணய மாற்றி
உலக ஜனாதிபதிகள்
உலக கொடிகள்